Pages

Friday, January 22, 2010

முதல்வர் வீட்டருகில் தற்கொலை

முதல்வரின் வீட்டருகே, சேலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சேலத்தை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர், சென்னை வேளச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். அங்கிருந்து நேற்று காலை முதல்வர் வீடு உள்ள கோபாலபுரத்திற்கு வந்தார். அங்கு நின்றிருந்த போலீசாரிடம் 'தான் குடும்பம் நடத்த கஷ்டப்படுவதாகவும், தனக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் ' என்றும் கேட்டுள்ளார். அவரை, சாலையில் நின்றிருந்த சிலர் விசாரித்து கொண்டிருந்த போதே, ஏற்கனவே குளிர்பானத்தில் கலந்து வைத்திருந்த பூச்சி மருந்தை திடீரெனக் குடித்து, மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்த போலீசார், ராயப்பேட்டை மருத்துவனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி, அவர் சிறிது நேரத்தில் இறந்தார். இது குறித்து ராயப்பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment