
நடிகர்கள், இயக்குனர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, தற்போது அவர்களது வங்கி லாக்கர்களுக்கு, "சீல்' வைக்கப்பட்டுள்ளது.
முன்னணியில் இருக்கும் திரைத்துறையினர் சிலர் வரி கட்டாமல் ஏய்த்து வருவதாக வருமான வரித்துறையினருக்கு புகார்கள் குவிந்ததைத் தொடர்ந்து, நடிகர்கள் சூர்யா, வடிவேலு, இயக்குனர்கள் ரவிக்குமார், முருகதாஸ் மற்றும் ஆதித்யா ராம் என்ற தெலுங்கு சினிமா பைனான்சியர் என ஐந்து பேரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 19ம் தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்கள், நகைகள் மற்றும் கணக்கில் வராத சில லட்சம் ரூபாயை, வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நடிகர்களின் வங்கி லாக்கர்களுக்கு நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள், "சீல்' வைத்தனர்.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ""எங்கள் அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரு பிரபல நடிகர் வீட்டிலிருந்து 80 லட்சம் ரூபாயும், மற்றொரு நடிகர் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, நேற்று அவர் களது வங்கி லாக்கர்கள், "சீல்' வைக்கப்பட்டுள்ளன. தற்போது கைப்பற்றப் பட்டுள்ள முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் தவிர, வங்கி லாக்கர்களில் பணம் மற்றும் நகைகள் இருந்தால் அவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த லாக்கர்கள் அடுத்த வாரம் திறந்து சோதனை செய்யப்பட உள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment