ஆண்கள் இதுபற்றி மணிக்கணக்கா பேசினாலும் கண்டிப்பது இல்லை. பெண்கள் பேசினால் தகாத பேச்சு என்கின்றனர். இப்படி வித்தியாசம் காட்டுவது பாவம். இஷ்டப்படி வாழ எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. என் தோழிகள் ஆண் நண்பர்களுடன் ஜாலியாக இருந்தால் கண்டிக்க மாட்டேன். அவர்களின் சொந்த விஷயம். அது பற்றி பேச நான் யார்.
அதே வேளை என் சினேகிதியின் கணவரோ அல்லது ஆண் நண்பரோ என்னை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பதும் பழகுவதும் எனக்கு பிடிக்காது. அதுபற்றி தோழியிடம் கூறி மோசமானவர், ஜாக்கிரதையாக இரு என்று எச்சரிப்பேன். நட்பில் மோசடி இருக்கக்கூடாது.
குட்டை பாவாடை அணிவது கவர்ச்சியாக உடை உடுத்துவது பற்றி குறை சொல்லக்கூடாது. அது அவரவர் இஷ்டம். மற்றவர்கள் பற்றி அவதூறாக பேசுவது எனக்கு பிடிக்காது. எனது சினேகிதியின் கணவன்மார்கள் யாரும் தவறானவர்களாக இல்லை. எனக்கு கணவராக வருபவர் துரோகம் செய்தால் திருத்த முயற்சிப்பேன். திருந்தாவிட்டால் வேறு மாதிரி முடிவு எடுப்பேன்" என்கிறார் ஸ்ரேயா .
No comments:
Post a Comment