"இந்தாண்டு மத்தியில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மாகாண கவுன்சில் தேர்தல் நடத்தப்படும் என, இலங்கை அமைச்சர் மைத்ரிபாலா ஸ்ரீசேனா கூறினார். இலங்கை ஆளும் கட்சியின் பொதுச் செயலரும், விவசாய அமைச்சருமான மைத்ரி ஸ்ரீசேனா கூறியதாவது: தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இந்தாண்டு மத்தியில், மாகாண கவுன்சில் தேர்தல் நடத்தப்படும். இந்த கவுன்சில் செயல்படத் துவங்கும் பட்சத்தில், அதன் செயல்பாடுகளை கண்காணித்து, அதில் உள்ள குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அதிபர் ஜெயவர்த்தனே காலத்தில், மாகாண கவுன்சில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருந்தாலும், அது முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. இவ்வாறு மைத்ரிபாலா ஸ்ரீசேனா கூறினார்.
இலங்கை தேர்தல் கமிஷன் கூறியதாவது: இலங்கையில் இம் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடக்கிறதா என்பதை கண்காணிக்கும் பணியில், நான்கு அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபடும். மேலும், தற்போது நடக்கவுள்ள அதிபர் தேர்தல், 2008ம் ஆண்டைய வாக்காளர் பட்டியலை அடிப்படையாக வைத்தே நடக்கவுள்ளது. எனவே, முகாம்களில் வசிக்கும் தமிழர்கள், தங்கள் பெயர்களை மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை " இவ்வாறு தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
Sunday, January 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment