Sunday, January 3, 2010
கள்ள நோட்டு -நேபாள முன்னாள் அமைச்சரின் மகன் கைது
இந்திய போலி ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டது தொடர்பாக நேபாள முன்னாள் அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன் கள்ள நோட்டுகளை வைத்திருந்தது தொடர்பாக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரித்ததில், நேபாள முன்னாள் அமைச்சரின் மகன் யூனூஸ் அன்சாரி இந்த போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்ததாக கூறினர். இதையடுத்து, சி.பி.ஐ.,நேபாள போலீசாரிடம் இது குறித்து விசாரிக்கும் படி கூறியது. நேபாள போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில், யூனூசிடம் அவரது கூட்டாளி இரண்டு பேரிடமும் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து, யூனூசும், அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். சலீம் மியா அன்சாரி முன்னாள் மன்னர் ஞானேந்திராவின் அமைச்சரவையில் நில சீர்திருத்தம் மற்றும் நிர்வாகத்துறை அமைச்சராக இருந்தவர். தற்போது, இவர் முஸ்லிம் லீக் கட்சியில் உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment