ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து கொண்டே படித்துவந்த இந்திய இளைஞர் ஒருவர், பணிக்குச் செல்லும் வழியில், அடையாளம் தெரியாத கும்பலால் குத்திக் கொல்லப்பட்டார். ஆஸ்திரேலிய நாட்டில் படித்து வரும் இந்திய இளைஞர்கள் மீது இனவெறித் தாக்குதல் தொடர்ந்து நடந்து வந்தது. சமீப காலமாக நின்று போயிருந்த அந்த வெறிச் செயல், புத்தாண்டு துவங்கியதும் கொலையோடு திரும்பவும் தொடங்கியிருக்கிறது.
பஞ்சாப்பைச் சேர்ந்த நிதின் கார்க் (21) என்பவர், ஆஸ்திரேலியாவின் நியூபோர்ட் என்ற பகுதியில் தங்கிப் படித்து வந்தார். பகுதி நேரமாக மேற்கு பூட்ஸ்பிரே என்ற இடத்திலுள்ள "ஹங்க்ரி ஜாக்'ஸ்' என்ற ரெஸ்டாரென்ட்டில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை அவர் அந்த ரெஸ்டாரென்ட்டுக்குச் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிலரால் வயிற்றில் குத்திக் கொல்லப்பட்டார். கும்பல் தப்பியோடிய பிறகு, அவர் சிறிது தூரம் ரத்தம் சிந்தியபடியே தள்ளாடியபடி நடந்து வந்துள்ளார். இதைப் பார்த்தவர்கள், அவரை ராயல் மெல்போர்ன் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி, இறந்துபோனார்.
இது குறித்து, அப்பகுதி போலீசார் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்,"கொலைக்கான நோக்கம் என்ன என்பதை கண்டுபிடிக்கவில்லை. இனவெறி அடிப்படையில்தான் இக்கொலை நடந்துள்ளது என்று கூற முடியாது" என்று தெரிவித்தனர்.
Sunday, January 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment