Monday, January 25, 2010
சினிமாவில் காமெடி போலீஸ்! டி.ஜி.பி., கண்டிப்பு
தமிழ் சினிமாக்களில் போலீசாரை காமெடியாக சித்தரிக்கப்படுவது காலம் காலமாக நடந்து வருகிறது. இதுபற்றி சமீபத்தில் டி.ஜி.பி.,யாக பொறுப்பேற்றிருக்கும் லத்திகா சரணிடம் கேட்டால், "இதுபோன்ற கிண்டல்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் நாங்கள் எங்கள் வேலையை செய்து கொண்டிருக்கிறோம் "என்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில்," தாதா கோஷ்டியினரோடு போதையில் போலீஸ் அதிகாரிகள் சதி செய்வது, க்ளைமாக்ஸில் மட்டுமே கடமையாற்ற வருவது போன்ற காட்சிகள் தற்போது குறைந்துள்ளன. இதுபற்றி ஒரு பட தயாரிப்பாளரிடம் கேட்டேன். போலீசை நல்லவங்களா காட்டுனா யார் படம் பார்ப்பாங்க?ன்னு அவர் கேட்டார். முதலில் நீங்க நல்லவிதமா படம் எடுங்கள் என்று நான் அவரிடம் சொன்னேன் " என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment