
சென்னை அசோக்நகர் 18-வது அவென்யூவை சேர்ந்தவர் ஆடிட்டர் சுப்பிரமணி. இவரது மனைவி கலா. சில தினங்களுக்கு முன்பு கலா மர்மஆசாமியால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதுகுறித்து விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கலா தினந்தோறும் உடற் பயிற்சி செய்ய செல்லும் மையத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
கலாவின் தோழிக்கும், உடற்பயிற்சி நிலையத்தின் இளம் பயிற்சியாளர் ஒரு வருக்கும் இருந்து வந்த கள்ளத்தொடர்பை கலா அம்பலப்படுத்தியதாக தகராறு ஏற்பட்டது. இதில் இளம்பயிற்சியாளர் தோழியுடனான கள்ளக்காதலை போலீசில் ஒப்புக்கொண் டார். ஆனால் தோழியோ, மகன் போலவே பழகினேன் என பிடிவாதமாக கூறி வந்தார்.
இந்த நிலையில் தோழி தனது கணவருக்கு தெரியாமல் இளம் பயிற்சியாளருடன் பேசுவதற்காகவே புதிதாக செல்போன் “சிம்கார்டு” ஒன்று வாங்கி உள்ளதும், அதை ரகசியமாக பயன்படுத்தி வந்ததும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிம்கார்டு மூலம் இளம்பயிற்சியாளருடன் நள்ளிரவு நேரத்தில் மணிக்கணக்கில் அரட்டை அடித்துள்ளார். ஆபாசமான எஸ்.எம்.எஸ். தகவல்களை இருவரும் பறிமாறிக் கொண்டுள்ளனர். இந்த சிம்கார்டை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இவர்களுக்கு இடையேயான கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கலாவை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஆனால் கலாவின் தோழியோ தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மவுனமாகவே இருந்து வருகிறார்.
No comments:
Post a Comment