Pages

Monday, January 25, 2010

வின் மணி படுகொலை அரசியல் பின்னணியா ?


சென்னை தியாகராய நகர் தெற்கு போக் ரோட்டைச்சேர்ந்தவர் மணியன். இவர் வின் பில்டர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரை எல்லாரும் மணி என்றே அழைப்பார்கள்.

மணியன் தனது ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகத்தை ராயப்பேட்டை யில் வைத்திருந்தார். நிலம் வாங்கி விற்பனை செய்வதுடன், வெளிநாடுகளில் தொழில் அதிபர்களிடம் பணம் பெற்று இங்குள்ளவர்களுக்கு கடன் கொடுக்கும் தொழிலையும் செய்து வந்தார். கடன் வாங்கிக் கொடுப்பதற்கு இவர் 10 சதவீதம் பணம் வாங்கிக் கொள்வதுண்டு.

கடந்த 7-ந்தேதி அவர் வழக்கம் போல ராயப்பேட்டை அலுவலகத்துக்கு சென்றிருந்தார். அன்று மாலை வீட்டுக்கு போன் செய்து தனது மனைவி பார்வதியுடன் பேசிய மணியன் வீட்டுக்கு புறப்பட்டு விட்டதாக கூறினார். ஆனால் திடீரென்று மாயமாகி விட்டார்.

மணியன் எங்கு போனார்? என்ன ஆனார்? என்பது மர்மமாக இருந்தது. பார்வதி பல இடங்களில் தேடியும் தன் கணவரை கண்டுபிடிக்க இயல வில்லை.

இதையடுத்து கடந்த 9-ந்தேதி அவர் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மணியன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால், அது தொடர்பான பிரச்சினைகளில் அவர் கடத்திச்செல்லப்பட்டு இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. மணியனுக்கும், யார்-யாருக்கெல்லாம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்தது என்று தகவல்களை திரட்டினார்கள். சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது மணியனுக்கும் குறிப்பிட்ட 4 பேருக்கும் இடையே வெளிநாட்டில் இருந்து பணம் பெறுவதில் தகராறு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. சில மாதங்களுக்கு முன்பு அந்த 4 பேரும் புதிதாக தொழில் தொடங்கப் போவதாகவும், வெளிநாட்டு தொழில் அதிபரிடம் ரூ. 1 கோடி பணம் வாங்கி தருமாறும் மணியனிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு சம்மதித்த மணியன், அந்த 4 பேருக்கும் பணம் பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்து வந்தார். இதற்காக பத்திரப்பதிவு உள்ளிட்ட செலவுகளுக்காக 2 லட்சம் ரூபாயை 4 பேரிடம் இருந்து மணியன் வாங்கினார். ஆனால் சொன்னபடி மணியனால் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றுக் கொடுக்க இயலவில்லை.

இதையடுத்து தங்களது 2 லட்சம் ரூபாயை திருப்பித் தரும்படி 4 பேரும் மணியனிடம் கேட்டனர். மணியனால் 2 லட்சம் ரூபாயை கொடுக்க இயலவில்லை. இதனால் அந்த 4 பேரும் மணியனிடம் தகராறு செய்து வந்தனர்.

இந்த தகவல்களை விசாரணை மூலம் கண்டு பிடித்த மயிலாப்பூர் போலீசார் 4 பேரில் பூபதி மற்றும் லீமாரோஸ் ஆகிய இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது மணியனை கடத்திச் சென்றது நாங்கள்தான் என்று பூபதியும், லீமா ரோசும் ஒத்துக்கொண்டனர்.

மணியன் எங்கே? என்று போலீசார் கேட்டபோது, அவரை கொலை செய்து விட்டதாக கூறினார்கள். இதைக்கேட்டதும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மணியனை எங்கு வைத்து, எப்படி கொலை செய்தீர்கள். அவர் உடலை என்ன செய்தீர்கள்? என்று போலீசார் விசாரித்தனர். அப்போது மணியன் கொல்லப்பட்ட விதத்தை பூபதியும் லீமா ரோசும் தெரிவித்தனர்.

7-ந்தேதி இரவு மணியனை கடத்திய 4 பேரும் அவரை ஒரு காரில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இரவு முழுக்க அவரிடம் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தியுள்ளனர். திருவள்ளூர் அருகே கார் சென்று கொண்டிருக்கும் போது 4 பேரும் சேர்ந்து மணியன் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டனர்.

பிணத்தை என்ன செய்வது என்று சிறிது நேரம் திணறியுள்ளனர். திருவள்ளூர் பகுதியில் பிணத்தை போட்டால் தெரிந்து விடும் என்று பயந்த 4 பேரும் ஆந்திரா எல்லையில் உள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று எரித்து விட தீர்மானித்தனர்.

அதன்படி 8-ந்தேதி தமிழ் நாடு-ஆந்திரா எல்லையில் உள்ள சத்தியவேடு பகுதிக்கு மணியன் உடலை எடுத்துச்சென்றனர். அங்கு மணியன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு சென்னைக்கு திரும்பி விட்டனர்.
முக்கால் பங்கு உடம்பு எரிந்த நிலையில் கிடந்த மணியன் பிணத்தை கைப்பற்றிய சத்தியவேடு போலீசார் அது யார்? என்று தீவிரமாக விசாரித்தனர். உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால், அவர்களால் துப்பு துலக்க இயலவில்லை. இதையடுத்து அடையாளம் தெரியாத பிணம் என்று மணியன் உடலை போலீசார் புதைத்து விட்டனர்.

இதற்கிடையே பூபதியும், லீமாரோசும் கொடுத்த தகவல்களின் பேரில் மயிலாப்பூர் போலீசார் சத்தியவேடு சென்று அங்குள்ள போலீசார் உதவியுடன் விசாரித்தனர். மணியன் உடலை மீண்டும் தோண்டி எடுத்து தடயங்கள் சேகரித்தனர். இதன் மூலம் மணியன் கடத்தி எரித்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

மணியன் கொலையில் லீமாரோசின் காதலரும் மற்றொரு நபரும் முக்கிய பங்கு வகித்துள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் தேடுவதை அறிந்ததும் அவர்கள் இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

No comments:

Post a Comment