
3-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள் முந்வந்தனர். ஆனால் அவர்களை ஏலம் விட்டபோது எந்த அணியும் அவர்களை ஏலம் எடுக்க முன்வரவில்லை.
அணிகள் திட்டமிட்டே பாகிஸ்தான் வீரர்களை ஏலம் எடுக்காமல் அவமதித்துவிட்டதாக பாகிஸ்தான் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் பாராளுமன்றத்திலும் விவாதம் நடந்தது. அப்போது பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் பாகிஸ்தான் வீரர்களை அவமதித்ததற்காக இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
இதையடுத்து பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய டி.வி. ஒளிபரப்பு மற்றும் சினிமா திரையிடுவதற்கு தடைவிதிக்க திட்டமிட்டு உள்ளது.
முதலாவதாக ஐ.பி.எல். போட்டியை பாகிஸ்தானில் ஒளிபரப்ப தடை விதிக்க உள்ளனர். அடுத்து இந்தியாவின் அனைத்து டி.வி. நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதிக்க உள்ளனர்.
பாகிஸ்தானில் இந்தி சினிமாக்கள் நன்றாக ஓடுவது வழக்கம். இதன் மூலம் இந்திய தயாரிப்பாளர்களுக்கு அதிக வருமானம் கிடைத்தது. எனவே இந்த வருமானத்தை தடுக்கும் வகையில் இந்திய சினிமாவை திரையிடவும் தடைவிதிக்க உள்ளனர்.
இது பற்றி பாகிஸ்தான் பாராளுமன்ற தகவல் தொடர்பு செயலாளர் அசீம் கூறும்போது, இந்திய டி.வி., சினிமாவுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. விரைவில் இந்த முடிவு எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment