Pages

Sunday, January 24, 2010

ஐ.பி.எல். போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களை ஆடவிட மாட்டோம்


சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது:-

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களை தொடர்ந்து தாக்கி வருகிறார்கள். இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல். போட்டியில் ஆட அழைத்து இருக்கிறார்கள். இது வெட்ககேடான விஷயம்.

ஐ.பி.எல். போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களை ஆடவிட மாட்டோம். மும்பையிலோ, மராட்டியத்திலோ அவர்கள் விளையாட முடியாது. பால்தாக்கரே உத்தரவின்படியே இதை செயல்படுத்த இருக்கிறோம்.

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படும் வரை நாங்கள் எங்கள் எதிர்ப்பை இப்படித்தான் வெளிப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment