Pages

Sunday, January 3, 2010

தமிழகத்தில் பெண் வக்கீல்கள் குறைவு: தலைமை நீதிபதி ஆதங்கம்


"நீதித்துறையின் புனிதத்தையும், மாண்பையும் காக்கவேண்டியது வக்கீல்களின் கடமை,'' என்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே பேசினார். மேலும், அவர் தமிழகத்தில் பெண் வக்கீல்கள் குறைவாக உள்ளனர் என்று கூறினார்.திருச்சியில், 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த பெண் வக்கீல் செல்லம் தமிழரசனுக்கு பாராட்டு விழா, நேற்று ஜமால் முகம்மது கல்லூரியில் நடந்தது.


விழாவில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஹேமந்த் லட்சுமண் கோகலே பங்கேற்று பேசியதாவது:தமிழகத்தில் நீதிபதிகளாகவும், வக்கீல்களாகவும் 30 சதவீதம் பெண்கள் உள்ளனர். அனைவரும் பல்வேறு பிரச்னைகளை எதிர் கொண்டுள்ளனர். பிரச்னைகள் தவிர்க்கப்பட்டு, அமைதியான சூழல் கொண்டு வருவது வக்கீல்களின் கடமையாகும். மாவட்ட அளவிலும், தாலுகா அளவிலும் தரமான வக்கீல்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வக்கீல் சங்கத்தின் தரத்தை உயர்த்துவது, ஒவ்வொரு வக்கீலின் கடமையாகும்.


நீதித்துறையில் தொடர்ந்து பணியாற்றி வரும் பெண் வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் பாராட்டு விழாக்கள் இதுபோன்று நடத்த வேண்டும்.மும்பை போன்ற பெருநகரங்களில், பெண் வக்கீல்களின் எண்ணிக் கை அதிகமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் குறைவாக உள்ளது. மாநிலத்தில் பெண் வக்கீல்களின் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடப் பது வருத்தத்துக் குரியதாகும். நீதித்துறையின் புனிதத்தையும், மாண்பையும் காக்கவேண்டிய கடமை, வக்கீல்களுக்கு உண்டு. இதற்கான பங்களிப்பை அனைத்து வக்கீல்களும் செலுத்தவேண்டும். வக்கீல்கள் எவ்வளவு காலம் பணியாற்றினார்கள் என்பதை விட, எப் படி பணியாற்றினார்கள் என்பது முக்கியம்.


வக்கீல் சங்கத்தின் இளைய தலைமுறையை நல்ல வக்கீல்களாக உருவாக்க வேண்டியது, மூத்த உறுப்பினர்களின் கடமை. அப்போது தான் கோர்ட்களில் விரும்பத்தகாத செயல் கள் நடப்பது தடுக்கப்படும். வக்கீல் சங்கத்தின் தரம் பேணிக் காக்க வேண்டும். பெண் வக்கீல்கள் பாராட்டப்படும் போது அவர்களின் எண்ணிக்கை உயரும். அப்போது தான், 30 சதவீதமும் உயரும் வாய்ப்பு ஏற்படும். கடந்த ஆண்டு திருச்சி நீதிமன்றத்தை ஆய்வு மேற்கொண்ட போது, அடிப் படை வசதிகள் தேவை என்பது தெரிந்து கொள்ளப்பட்டது. அதற் கான பரிந்துரை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆகையால், விரைவில் நல்ல நீதிமன்ற வளாகம் திருச்சிக்கு கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.ஐகோர்ட் நீதிபதிகள் அக்பர் அலி, ராஜேந்திரன், திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி தங்கக்கனி, திருச்சி பெண் வக்கீல் சங்க தலைவர் ஜெயந்திராணி, உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment