Pages

Sunday, January 3, 2010

அலறிய நியூயார்க் விமான நிலைய அதிகாரிகள்

நியூயார்க் நகரில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள நியூஜெர்ஸி விமான நிலையம் உள்ளது. இது சர்வதேச விமான நிலையம் ஆகும். இங்கு ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள செக்போஸ்ட்டில் இருந்து பாதுகாப்பையும் மீறி ஒரு பிரமுகர் விமான நிலையத்தில் நுழைந்துள்ளார். இது பாதுகாப்பு துறை வீடியோ மூலம் தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். உடனடியாக பயணிகள் ஆங்காங்கோ நிறுத்தப்பட்டனர். விமான நிலையம் மூடப்பட்டது. தொடர்ந்து அந்த மர்ம மனிதனை தேடும் பணி நடந்து வருகிறது. செக்பாய்ன்ட் வழியாக இந்த மர்ம மனிதன் பாதுகாப்பு படைவீரர்களின் கண்ணை மூடி பயணிகளோடு, பயணியாக நுழைந்து சென்றிருப்பதாக அமெரிக்காவில் உள்ள சி.என்.என்., தெரிவித்துள்ளது. மர்ம மனிதனை தேடும்பணி காரணமாக அங்கிருந்து விமானங்கள் எதுவும் கிளம்பவில்லை. பயணிகள் பலர் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

No comments:

Post a Comment