நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இரண்டு லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக, பார்லிமென்ட் நிலைக்குழு கவலை தெரிவித்துள்ளது. சர்வ சிக்ஷா அபியான் திட்டம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த பார்லிமென்ட் நிலைக் குழு, இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவல்: நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இரண்டு லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் நிரப்பப்படாதது கவலை அளிப்பதாக உள்ளது.
இந்த காலியிடங்களில், நிரந்தர ஆசிரியர்களுக்கு பதிலாக, தொகுப்பூதியத்தின் அடிப் படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது என்பது, பிரச்னைக்கு சரியான தீர்வாக இருக்காது. தற்காலிக ஆசிரியர்கள் மாணவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், பொறுப் பாக செயல்படுவர் என, கூற முடியாது.
ஆசிரியர் பற்றாக்குறை என்பதற்காக, தரமில்லாத கல்வியை போதிப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி கல்வித் துறை அதிகாரிகள், நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். உ.பி., உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் போதிய பயிற்சி பெறாத, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம். இந்த மாநிலங்களில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்த அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட வேண்டும். அதேபோல், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதும் கவலை அளிக்கிறது. இவ்வாறு பார்லிமென்ட் நிலைக் குழு தெரிவித்துள்ளது.
பல்கலையில் ஆசிரியர் பற்றாக்குறை? : பல்கலைக் கழகங்களிலும், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிலும் உரிய தகுதி பெற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை பற்றி ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு உயர்கமிட்டியை அமைத்திருக்கிறது. கான்பூர் ஐ.ஐ.டி., டைரக்டர் எஸ்.கே.தண்டே தலைமையில் ஒரு கமிட்டியை அரசு அமைத்திருக்கிறது. இக்கமிட்டி வரும் பிப்ரவரிக்குள் மத்திய அரசு சார்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பல்கலைக் கழகங்கள் சந்திக்கும் பிரச்னை பற்றி அறிக்கை தரும்.
Sunday, January 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment