ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நேற்று வேலைக்குச் சென்றுகொண்டிருந்த 21 வயது இந்தியர் அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக்கொல்லப்பட்டார்.
நித்தின் கார்க் என்ற அந்த வாலிபரே இதுவரை தாக்குதல்தகளுக்கு ஆளானவர்களில் மரணமடைந்த முதல் நபர் என்று நம்பப்படுவதாக தி டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை தெரிவித்தது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நித்தின் ஆஸ்திரேலியாவில் நிரந்தர வாசம் பெற்றிருந்தார் என்றும் இவர் நேற்றுக் காலை தாம் பகுதி நேரமாக பணிபுரியும் ‘ஹங்கிரி ஜாக்ஸ்’ என்னும் உணவகத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது வழியில் சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை சுமார் 6.00 மணிக்குத் தாக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.
அவர் ராயல் மெல்பர்ன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
Sunday, January 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment