Pages

Sunday, January 3, 2010

சிங்கப்பூர் டு மலேசியா - டிக்கெட் விற்று தீர்ந்தது

னப் புத்தாண்டுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கிறது. ஆனால், அதற்குள் மலேசியாவுக்குச் செல்லும் பேருந்து டிக்கெட்டுகள் துரிதமாக விற்பனையாகத் தொடங்கிவிட்டன.
சீனப் புத்தாண்டுக்கு முன்தினம் போன்ற குறிப்பிட்ட சில நாட்களுக் கான டிக்கெட்டுகள் கிட்டத் தட்ட முற்றிலும் விற்று முடிந்து விட்டதாகச் சில நிறுவனங்கள் கூறுகின்றன.
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் மலிவுக்கட்டண விமானச் சேவைகள் அறிமுகமானதால் பாதிப்படைந்த தொழில் துறைக்கு இது நல்ல செய்தியே.
சீனப் புத்தாண்டு வாரத் திற்கான பேருந்து டிக்கெட்டு களைச் சென்ற ஆண்டு நவம்பர் மாதமே மக்கள் வாங்கத் தொடங்கி விட்டனர்.
டிக்கெட் விலை கிட்டத் தட்ட இருமடங்கு உயர்ந்து விட்ட நிலையிலும், டிக்கெட்டுகள் பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன.
“நாங்கள் நவம்பர் மாதம் டிக்கெட்டுகளை விற்கத் தொடங்கினோம். குறுகிய காலத்தில் அனைத்தும் விற்று முடிந்துவிட்டன” என்று கிராஸ்லாண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் நிர்வாகி டான் பூ ஹுவாட் கூறினார்.
“நாங்கள் கிட்டத்தட்ட 90% டிக்கெட்டுகளை விற்று விட்டோம். சற்று தூரமாக இருக்கும் இடங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் மட்டுமே சில இருக்கைகள் இன்னும் காலியாக உள்ளன. இன்னும் அதிக டிக்கெட்டு களை விற்க கூடுதல் பேருந்து களைச் சேர்க்கிறோம்” என்றார் ஃபைவ் ஸ்டார்ஸ் டூர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கென் லிம்.
சீனப் புத்தாண்டு கால கட்டத்தில் டிக்கெட் விற்பனை சூடு பிடித்தாலும், மலிவுக் கட்டண விமானச் சேவைகள் அறிமுகமானது முதல் தங்கள் தொழில் 30% குறைந்து விட்டதாக நிறுவனங்கள் கூறுகின்றன.
“ஜோகூர் முதல் கோலா லம்பூர் வரை தொழில் அவ்வள வாகப் பாதிக்கப்படவில்லை. ஆனால் கோலாலம்பூருக்கு அப்பால் ஈப்போ, பினாங்கு போன்ற மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படு கின்றன” என்றார் எக்ஸ்பிரஸ் பஸ் நிறுவனங்கள் சங்கத்தின் உறுப்பினர் செபஸ்தியன் யிப்.

No comments:

Post a Comment