இந்தோனீசியாவின் பாலித் தீவில் கடந்த வாரக் கடைசியில் ஜப்பானிய மாதிடம் கொள்ளையடிக்கப் பட்டு, அதற்குப் பின் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக இந்தோனீசியப் போலிசார் தெரிவித்துள்ளனர்.
இவைதான் அந்த மாது கொலை செய்யப்பட்டதற்கான காரணங்கள் என்றும் இந்தோனீசியப் போலிசார் விளக்கியுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட அந்த ஜப்பானிய மாதுவிடமிருந்த கைக் கடிகாரம், மூன்று கடன் அட்டைகள் மற்றும் கழுத்தில் அணியும் மூன்று ஆபரணங்கள் காணவில்லை என்று அவர்கள் தெரிவித்ததாக தி ஜகார்த்தா குளோப் என்ற பத்திரிகைத் தகவல் கூறுகிறது.
அத்துடன் அந்த மாது தொடர்பிலான தடயவியல் சோதனையில் அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதை உறுதி செய்வதாக செய்தியாளர் கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுதிஸ்னா தெரிவித்தார்.
Sunday, January 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment