
விஜயகாந்த் தலைமையில்தான் எங்கள் திருமணம் நடக்கும் என்று நடிகை ஷகிலாவை திருமணம் செய்யப்போகும் வாலிபர் சதீஷ் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை ஷகிலா நாச்சியார்புரம் படப்பிடிப்பில் செய்தியாளர்களிடம் வெளிப்படையாக பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
எனக்கு பாதுகாப்பாகவும், துணையாகவும் இருந்தவர் என் அம்மா. அவர் கொடுத்த ஊக்கத்தில்தான் நான் 200 படங்களுக்குமேல் நடித்து முடித்தேன். சமீபத்தில், அம்மா மரணமடைந்து விட்டார்.அந்த கவலையில்தான் மெலிந்து விட்டேன். முன்பு இருந்ததை விட, 20 கிலோ எடை குறைந்துவிட்டேன். அம்மா இறந்தபின், நான்தான் சமைக்கிறேன். நான் சமைத்த சாப்பாட்ட சாப்பிட எனக்கே பிடிக்கவில்லை. உணவு பழக்கவழக்கங்கள் மாறிவிட்டதால், என் உடல் மெலிந்து வருகிறது.
இனிமேல்தான் வாழ்க்கையில் ஒரு நல்ல துணை அவசியம் என்பதைப் புரிந்து கொண்டதால், இப்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். கடந்த ஆண்டே நடந்திருக்க வேண்டிய நிகழ்ச்சி இது.மணமகன் எனக்கு நன்கு அறிமுகமானவர். ஒரு தொழிலதிபர். சென்னையில்தான் வசிக்கிறார். இப்போதைக்கு அவர் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. வேண்டுமென்றே அவர் மனதைச் சிலர் கலைக்கக் கூட முயற்சிப்பார்கள். இரண்டு ஆண்டுகளுக்குமேல் நாங்கள் காதலித்து வந்தாலும், வம்பு பேசுபவர்கள்தானே இந்தக் காலத்தில் ஜெயிக்கிறார்கள்!.
இது காதல் திருமணம் என்றாலும், என் வருங்காலக் கணவரின் பெற்றோர்களின் சம்மதத்துடன்தான் நடக்கிறது.
திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நான் நடிப்பேன். அதற்கு எனக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் அவர் விதிக்கவில்லை. இப்போதும் என் கைவசம் 10 படங்கள் உள்ளன. மலையாளப் பட உலகில் என்னை விரட்டிவிட்டார்கள் என்று கூறுவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். சமீபத்தில் கூட சோட்டா மும்பை படத்தில் மோகன்லாலுடன் நடித்தேன்.
இப்போது நான் கவர்ச்சிப் படங்களில் நடிப்பதில்லை. குணச்சித்திர வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன்," என்ற ஷகிலாவிடம், 'நீங்க அழுதால் உங்கள் ரசிகர்கள் ரசிப்பார்களா?' என்று ஒரு கேள்வியை எழுப்பினர் நிருபர்கள்.
அதற்கு அவர், "இதுக்கு மேல வேற என்ன எதிர்பார்க்கப் போகிறார்கள்... பதினைந்து வருடங்களுக்கு முன்பு ரசிகர்கள் என்னை கவர்ச்சியாக மட்டும் பார்க்க ஆசைப்பட்டார்கள். இப்போது அந்த ஆசை மாறியிருக்கும் என நம்புகிறேன.." என்றார்.
அந்த வாலிபர் யார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அவரது பெயர் சதீஷ். ஆவடியைச் சேர்ந்த தொழில் அதிபர். விஜயகாந்த் தே.மு.தி.க.வை ஆரம்பித்தபோது அக்கட்சியில் உறுப்பினரானார். வில்லிவாக்கம் ஒன்றிய தே.மு.தி.க. செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். தற்போது ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார்.
ஷகிலா சதீஷ் திருமணத்தை இரு வீட்டாரும் பேசி முடிவு செய்துள்ளனர். விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது. ஜூன் மாதம் திருமணம் நடத்த முடிவு செய்து உள்ளனர். ஷகிலா திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பாரா? அல்லது சினிமாவுக்கு முழுக்கு போடுவாரா? என்று தெரியவில்லை. சதீசுடன் கலந்து ஆலோசித்த பிறகு இதுபற்றி முடிவு செய்வேன் என்று ஷகிலா கூறியுள்ளார்.
மலையாளத்தில் ஷகிலா 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். எல்லாமே ரூ.25 லட்சம் செலவில் தயாரான சிறு பட்ஜெட் படங்கள்தான். ஆனால் வசூலில் மோகன்லால், மம்முட்டி படங்களை வீழ்த்தியது. இதனால் இரு நடிகர்களுமே பயந்தனர். ஷகிலாவின் புது படங்கள் ரிலீசாகும்போது தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. மம்முட்டி, மோகன்லால் படங்கள் ஓடும் தியேட்டர்களில் வெறிச்சோடின.
மலையாள படங்களுக்கு முழுக்கு போட்டதும் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். திருமண ஏற்பாடுகள் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ், நான் தீவிர விஜயகாந்த் ரசிகன். தொடக்கத்தில் அவரது ரசிகர் மன்றத்தில் பொறுப்பில் இருந்தேன். தே.மு.தி.க. ஆரம்பித்ததும் வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளரானேன். எங்கள் திருமணம் கேப்டன் தலைமையில் நடைபெறும். அவர் தேதிக்காக காத்திருக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment