Saturday, January 2, 2010
இரவு விருந்தில் மெல் கிப்சனுடன் பிரிட்னி ஸ்பியர்ஸ்
பிரிட்னி ஸ்பியர்ஸ் இன்னும் ஒரு சலசலப்பில் சிக்கியுள்ளார். மெல் கிப்சனுடன் இரவு விருந்தில் அவர் கலந்து கொண்டதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது.பாப் இளவரசி பிரிட்னி ஸ்பியர்ஸ் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றதாக ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் பிரிட்னி.இந்த நிலையில் கலிபோர்னியாவில் உள்ள ரஷ்ய ரெஸ்டாரென்ட்டில் அவரும், மெல் ஜிப்சனும் இரவு விருந்தில் கலந்து கொண்டதாக புதுச் செய்தி வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் கிப்சனும், பியர்ஸும் உணவருந்தியதாக கூறப்படுகிறது.இது ஹோட்டல்காரர்கள் கூறுகையில், இருவரையும் சேர்ந்து பார்த்தபோது திரில்லிங்காக இருந்தது. எங்களை விட பிரிட்னிதான் ரொம்ப எக்சைட்டட் ஆக இருந்தார் என்றனர்.முதலில் பிரிட்னியும் அவரது நண்பரும் ஹோட்டலுக்கு வந்தனாரம். பின்னாலேயே கிப்சன் தனது சகாக்கள் சிலரோ வந்து விருந்தில் இணைந்து கொண்டாராம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment