Saturday, January 2, 2010
பொங்கல் வைக்க போகும் படங்கள்
ஆயிரத்தில் ஒருவன்:
கார்த்தி, ரீமாசென், பார்த்திபன், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். செல்வராகவன் இயக்கியுள்ளார். ட்ரீம்வேலி கார்ப்பரேஷன் சார்பில் ரவீந்திரன் தயாரித்துள்ளார். இசை, ஜி.வி. ப¤ரகாஷ்குமார். ரூ. 32 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள பேன்டசி கதை படமிது. ஆராய்ச்சிக்காக காட்டுக்குள் நுழையும் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா ஆகியோர், பல நூற்றாண்டுகள் பின்னோக்கிய காலத்துக்குள் செல்வது போல இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.
குட்டி:
தனுஷ், ஸ்ரேயா ஜோடி. ‘யாரடி நீ மோகனி’யை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரித்துள்ளது. தெலுங்கில் ஹிட்டான ‘ஆர்யா’ படத்தின் ரீமேக் இது. கல்லூரி மாணவரான தனுஷ், ஸ்ரேயாவை காதலிக்கிறார். ஸ்ரேயா இன்னொருவரை விரும்புகிறார். இதைத் தொடர்ந்து வரும் பிரச்னைகள்தான் கதை. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
ஜக்குபாய்:
சரத்குமார்&கே.எஸ். ரவிக்குமார் கூட்டணி நீண்ட இடைவெளிக்கு பின் இணைந்துள்ள படம். இதில் சரத்குமாரின் மகளாக ஸ்ரேயா நடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் படிக்கும் மகளை பார்க்க செல்கிறார் சரத். அங்கு தனது பழைய எதிரிகளால் மகளுக்கு ஆபத்து. அதிலிருந்து மகளை சரத் மீட்பது கதை. ராடன் நிறுவனம் தயாரித்துள்ளது.
அங்காடித் தெரு:
‘வெயில்’ படத்துக்கு பின் வசந்தபாலன் இயக்கியுள்ள படம். புதுமுகம் மகேஷ், அஞ்சலி ஜோடி. விஜய் ஆண்டனி, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளனர். ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. கடைகள் நிரம்பிய வீதி, அங்கு பணிபுரியும் பணியாட்கள், அவர்களின் உறவு, காதல், துக்கம் பற்றி சொல்லும் படமிது.
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்:
லாரன்ஸ், சந்தியா, பத்மப்பிரியா, லட்சுமிராய், நாசர் என நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள படமிது. 30 ஆண்டுகளுக்கு பின் தமிழில் வெளியாகும் கவுபாய் கதை. பிரமாண்ட செட்டுகள் இப்படத்தின் முக்கிய அம்சம். கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார். சிம்புதேவன் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார், இசை.
நாணயம்:
கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ் சார்பில் எஸ்.பி. சரண் தயாரித்துள்ள படம். பிரசன்னா, சிபிராஜ் நடித்துள்ளனர். சக்தி ராஜன் இயக்கியுள்ளார். இசை, வசந்தபாலன். வங்கி ஒன்றை திட்டமிட்டு கொள்ளையடிப்பதுதான் கதை. அதை த்ரில்லுடன் சொல்கிறது படம். சிபிராஜ் வில்லனாக நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நடித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment