Saturday, January 2, 2010
82 லட்சம் பேர் தரிசனம்
காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி குகைக் கோவிலில், 2009ம் ஆண்டில் 82 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.காஷ்மீரின் ஜம்மு பகுதியில், உலகப் பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி குகைக் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவர். பக்தர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 82.05 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.இதுகுறித்து, கோவில் நிர்வாக அதிகாரி பண்டாரி கூறுகையில், " கடந்த 2009ம் ஆண்டில், 82 லட்சத்து ஐந்தாயிரத்து 917 யாத்ரீகர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு வந்துள்ளனர். முந்தைய ஆண்டை விட, 14 லட்சம் பேர் அதிகமாக வந்துள்ளனர். ஒரு கோடி பக்தர்களை வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம். அதற்காக தயாராகி வருகிறோம். இன்னும் சில ஆண்டுகளில் அது நடக்கும்," என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment