வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் வாங்கிக் குவித்துள்ள சொத்துகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தொடர்பான புகார்கள் மத்திய அரசிடம் குவிந்த வண்ணம் உள்ளன. இவைகளை தீர்க்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் பல இடங்களிலும், ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்து உள்ளனர். அவர்கள் மிக அதிக தொலைவில் இருப்பதாலும், சட்ட நுணுக்கங்கள் பற்றி போதிய அறிவு பெறாததாலும், சொத்துக்களை கண்காணிக்கவோ, பாதுகாக்கவோ முடியாமல் திண்டாடுகின்றனர்.
அவர்கள் வாங்கி வைத்துள்ள நிலம், வீடு, வீட்டு மனைகளை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமித்தும், அபகரித்தும் விடுகின்றனர்; இது சம்பந்தமான புகார்கள் அதிக அளவில் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு வந்த வண்ணம் உள்ளன. பெரும்பாலான புகார்கள் டில்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம் மற்றும் அமிர்தசரஸ் உட்பட சில பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்கள் பற்றியவை.இந்த புகார்கள் குறித்து மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சர் வயலார் ரவி கூறியதாவது:வெளிநாடு வாழ் இந்தியார்களிடம் சமீபகாலமாக அதிக அளவில் சொத்து ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்கள் வருகின்றன. சொத்துகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்தல், பாகப்பிரிவினை செய்வதில் தகராறுகள், ரியல் எஸ்டேட் புரோக்கர் களால் ஏமாற்றப்படுதல் போன்ற புகார்கள் அதிகம்.
சொத்து தொடர்பான புகார்களைத் தீர்க்க, மாநிலங்கள் தனி அதிகாரி ஒருவரை நியமித்து, அவர் தன்னிச்சையாக செயல் பட்டு பாரபட்சம் இன்றி சொத்து தொடர்பான வழக்குகளை தீர்க்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்.சொத்து சம்பந்தமான பிரச்னைகளைத் தீர்க்க அடுத்த மாதம் கலந் தாய்வு கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளேன். அப் போது ரியல் எஸ்டேட் துறையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கு பாதுகாப்பு அளிப்பது, சொத்து தகராறுகளை தீர்க்க மாநில அளவில் அமைப்பு ஒன் றை நிறுவுவது, மரபுரிமை சட்டம், சொத்து தொடர்பான விவரங்களை மக்கள் அறிந்து கொள்ள தீவிர பிரச்சாரம் மேற் கொள்வது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. இவ்வாறு அமைச்சர் வயலார் ரவி கூறினார்.
Saturday, January 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment