
அமர்சிங்கின் நெருங்கிய ஆதரவாளரும், உ.பி., மொரதாபாத் எம்.எல்.ஏ., மான சந்தீப் அகர்வால் "அமர்சிங்கின் ராஜினாமாவை தொடர்ந்து, சமாஜ்வாடி கட்சியின் ராம்பூர் தொகுதி எம்.பி.,யான ஜெயப்ரதா, ராஜ்சபா உறுப்பினரும், அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயாபச்சனும் வெளியேற உள்ளனர். மேலும், ஐந்து எம்.பி.,க்கள் மற்றும் 25 எம்.எல்.ஏ.,க்கள் அக்கட்சியிலிருந்து விலக, ஆலோசித்து வருகின்றனர் "என்றார் .
சமாஜ்வாடி கட்சியிலிருந்து விலகிய அமர்சிங், விரைவில் புதிய கட்சி துவங்க உள்ளார். அவரது ஆதரவாளர்கள் அனைவரும் ஒன்று கூடி, எதிர்கால திட்டங்கள் குறித்து முடிவு மேற்கொள்ள உள்ளோம். சமாஜ்வாடி கட்சியை, மாநில அஸ்தஸ்தில் இருந்து தேசியக் கட்சியாக உயர்த்த, அமர்சிங் அயராது உழைத்தார்.இவ்வாறு சந்தீப் அகர்வால் கூறினார்.இதனிடையே, சமாஜ்வாடிக் கட்சிக்கு மற்றொரு பிரச்னையாக, கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜானேஸ்வர் மிஸ்ரா ( வயது 77) நேற்று காலமானார். இவரது இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள, அமர்சிங் அலகாபாத் சென்றார்.
No comments:
Post a Comment