
நயன்தாரா தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்த அடூர்ஸ் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. மலையாளத்தில் திலீப் ஜோடியாக நடித்த பாடிகார்டு படம் இன்று ரிலீசானது. இதில் பிரபுதேவா டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
"சித்திக் சிறந்த கதாசிரியர் பாடிகார்டு படத்தின் கதை பிடித்ததால் சம்பளத்தை குறைவாக பேசி நடித்தேன். காமெடி, திருப்பங்களுடன் யதார்த்தமாக படம் வந்துள்ளது.
சித்திக்கின் நெருங்கிய நண்பர் பிரபுதேவா. இரு பாடல் காட்சிகளுக்கு பிரபு தேவா டான்ஸ் அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று சித்திக் பிரியப்பட்டார். பிரபுதேவாவிடம் இதுபற்றி பேசினார். அவரும் சம்மதித்து இரு பாடல் காட்சிகளுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினார்.
நான் பத்திரிகையாளர்களை அதிகம் சந்திப்பதில்லை என்று கூறுகின்றனர். பேச என்னிடம் எதுவும் இல்லாததால் ஒதுங்கி இருக் கறேன். இந்த வருடத்தை பொறுத்த வரை எனக்கு சிறந்த வருடமாகதுவங்கியுள்ளது. அடூர்ஸ் தெலுங்கு படம் ஹிட்டான சந்தோஷத்தில் இருக்கிறேன். பாடி கார்டு படமும் வெற்றி பெறும்.
சொந்த வாழ்விலும் திரையுலக வாழ்விலும் நிறைய பிரச்சினைகளில் சிக்கினேன். அதனால்தான் எதுவும் பேசவில்லை " என்றார்.
No comments:
Post a Comment