Pages

Friday, January 22, 2010

காங்கிரஸ் கழண்டு கொண்டது - தெலுங்கானா விழயத்தில் ?


ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்ககோரி கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடந்து வருகிறது. இதற்காக தெலுங்கானா பகுதியில் உள்ள கட்சிகள், மாணவர் அமைப்புகள் அடங்கிய கூட்டு போராட்டக்குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக பேராசிரியர் கோதண்டம் இருந்து வருகிறார். இவர் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில் நேற்று ஐதராபாத்தில் நடந்த தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தெலுங்கானா கூட்டு போராட்ட குழுவில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டது. இதுபற்றி காங்கிரசார் கூறும்போது," தனி மாநிலம் அமைய தெலுங்கானா பகுதியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடி வருகிறோம். பதவியை விட தெலுங்கானாதான் முக்கியம் என்று கருதி எம்.எல்.ஏ., மந்திரி பதவிகளை ராஜினாமா செய்தோம்.

ஆனால் தனி மாநில போராட்டத்தின்போது கூட்டு போராட்டக்குழுவில் எங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் எங்கள் கட்சி தலைவர் சோனியா காந்தியை தெலுங்கானா கட்சி தொண்டர்கள் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். இதனால்தான் நாங்கள் அப்போராட்டக்குழுவில் இருந்து விலகினோம் " என்றனர்.

இந்நிலையில் தெலுங்கானா கூட்டு போராட்டக் குழுவில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியும் விலக முடிவு செய்துள்ளது. இதுபற்றி நாகம் ஜனார்த்தனரெட்டி கூறும்போது, தெலுங்கானா கூட்டு போராட்டக்குழுவில் எங்கள் கட்சிக்கு முக்கியத்துவம் இல்லை. தெலுங்கானாவில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பதவி விலக வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் யாரும் பதவி விலகவில்லை. இதனால் நாங்கள் கூட்டு போராட்டக்குழுவில் இருந்து விலக முடிவு செய்துள்ளோம் என்றார்.

தெலுங்கானா கூட்டு போராட்டக்குழுவில் இருந்து காங்கிரஸ்- தெலுங்குதேசம் விலகுவதால் அதில் பிளவு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment