Pages

Friday, January 22, 2010

பாய்ந்த புலி விஜய சாந்தி


தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி பொதுச் செயலாளரும் நடிகையுமான விஜயசாந்தி ஆந்திர மாநிலம் மெதக் மாவட்டம் டி.தர்மாராம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அவர் மேடையில் பேச தொடங்கியதும் எதிரே இருந்த தொண்டர்கள் ஜெய் தெலுங்கானா என்று கோஷம் போட்டனர்.

இதனால் அவர் சிறிது நேரம் பேச்சை நிறுத்தினார். பின்னர் அவர் பேச முயன்றபோது மேடையில் இருந்த தெலுங்கானா ஆதரவாளர் ஒருவர் ஜெய் தெலுங்கானா என்று கோஷம் போட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விஜயசாந்தி அவரை அடிக்கப் பாய்ந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் இருந்த மற்ற தலைவர்கள் விஜயசாந்தியை சமாதானப்படுத்தினர்.

அதன்பிறகு விஜயசாந்தி 'என் உயிர் இருக்கும் வரை தெலுங்கானாவுக்காக போராடுவேன்' என்று பேசிக்கொண்டிருந்தபோது தொண்டர்கள் திடீரென எழுந்து ஜெய் ஜெய் தெலுங்கானா என்று கூச்சலிட்டனர்.

இதனால் எரிச்சல் அடைந்த விஜயசாந்தி 'என்னை பேசவிடாமல் தடுக்க எவ்வளவு பணம் வாங்கினீர்கள்?' என்று கூறியபடி மேடையில் இருந்து வேகவேகமாக இறங்கினார். பின்னர் காரில் ஏறிச்சென்றார்.

இச்சம்பவம் பற்றி விஜயசாந்தி கூறும்போது, "தெலுங்கானா கட்சியை சேர்ந்த சில தலைவர்கள்தான் தொண்டர்களுக்கு பணம் கொடுத்து என்னை பேசவிடாமல் தடுத்துள்ளனர். நான் இதுபற்றி சிறிதளவு கூட கவலைப்படவில்லை" என்றார்.

No comments:

Post a Comment