
வறுமைக் கோட் டுக்குக் கீழ் உள்ள ஏழை மக்களின் எண்ணிக்கை பற்றி, முரண்பாடான தகவல்கள் கிடைத்திருப்பதால் குழம்பிப்போயிருக்கிறது மத்திய அரசு. தெண்டுல்கர் கமிட்டி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள வருமானம் மிகக் குறைந்தவர்கள் பற்றிய விவரங்களைத் திரட்டியது. அதன்படி, மொத்தம் 37.2 சதவீதம் பேர் ஏழைகளாக இருக் கின்றனர். ஆனால், மாநில அரசுகள் தந்துள்ள விவரங்களின் படி மொத்தம் 27 சதவீதம் பேர் தான் ஏழைகளாக இருக்கின்றனர். இந்த முரண்பட்ட தகவல்களால் மத்திய அரசு குழம்பிப் போயிருக்கிறது. இதனால், ஏழைகள் எவ்வளவு பேர் என்ற சரியான எண்ணிக்கையைக் கணக்கிட, ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது.
No comments:
Post a Comment