
இலங்கையில் வருகிற 26-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. இந்த நிலையில் இங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
எதிர்க்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவின் பிரசார மானேஜர் திரன் அல்லெஸ் என்பவரது வீடு கொழும்பில் உள்ளது. இன்று காலை இவரது வீட்டின் மீது ஒரு கும்பல் வெடிகுண்டு வீசி தாக்கியது. அக்கும்பல் வேனில் வந்தது.
இந்த குண்டு வெடித்ததில் அவரது கார் எரிந்து சேதம் அடைந்தது. வீட்டின் பெரும்பகுதி இடிந்தது. வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் இச்சம்பவத்தால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. அனைவரும் உயிர் தப்பினர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment