
சரத்குமார் நடித்த ஜக்குபாய் படத்தின் டி.வி.டி.க்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படம் வெளியாகும் முன்னர் ஜக்குபாய்டத்தின் சிடி.க்கள் வெளி வந்தது திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது தொடர்பாக பூக்கடை உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தபோது, அப்துல் ஜபார் (50) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவரிடம் ஜக்குபாய் சி.டி. இருப்பது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். இவரது மகன் சாகுல் அமீது ஜக்குபாய் படத்தை சி.டி.யில் காப்பி செய்து வெளியிட்டதும் தெரிய வந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, இணை கமிஷனர் சேசஷாயி, துணை கமிஷனர் சண்முகவேல் ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று கமிஷனர் ராஜேந்திரன் இருவரையும் குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment