இலங்கையில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சேக்கும், முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன் சேகாவுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் வெற்றி பெற சரத்பொன்சேகாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.
சரத்பொன்சேகா தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழர் அமைப்புகளும் அவருக்கு ஆதரவாக மாறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது ராஜபக்சேக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக கொழும்பு பத்திரிக்கைகளில் இன்று காலை தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவர் மருத்துவர்கள் ஆலோசனையை பெற்று வருகிறாராம்.
ராஜபக்சே கடந்த சில மாதங்களாக தூக்கமின்மையால் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் காரணம் இல்லாமல் கோபப்படுவதாக சிங்கள உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள். அவரை நன்கு ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ராஜபக்சேக்கு ஆலோசனை கூற மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு நிர்வாகத்தை நடத்த அவருக்கு ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, January 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment