Tuesday, January 5, 2010
மொழி பெயர்ப்பு நூல்களும் புதிய படைப்புகளே-கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
மொழி பெயர்ப்பு நூல்களும் புதிய படைப்புகளே என்று புத்தக கண் காட்சியில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார். சென்னை ஷெனாய் நகரில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், பத்திரிக்கையாளர் சிவன் எழுதிய திரைச் சிற்பிகள் என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவிற்கு கவிதா பப்ளிகேஷன்ஸ் சேது சொக்கலிங்கம் தலைமை வகித்தார். புலவர் வேலி வரவேற்றார். கவிஞர் அமீர்அப்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், சிறுபான்மை சமூகப் புரட்சி இயக்க நிறுவனர் லியாகத்அலிகான், பாரதிகிருஷ்ணகுமார், கற்பகம் புத்தகாலய நல்லதம்பி, மகேந்திரன், பாலுமகேந்திரா, எழுத்தாளர் சுப்ரஜா ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், " திருவாருரில் பிறந்தால் முக்தி, சிதம் பரத்தை தரிசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பார்கள். இப்படி பக்தி, முக்தியில் நம்பிக்கை அற்றவள் நான். ஆயினும் திருவாரூரில் பிறந்தவர் மீது நம்பிக்கை கொண்டவள். சில நூல்களை பார்க் கும் போதே, அதன் கணத்தைப் பார்த்து இதை எப்போது படித்து முடிப் போம் என்று தோன்றும். ஆனால் இந்த நூல் படிக்கப், படிக்க சுகமாக இருக்கிறது. மேலோட்டமாக படித்துப் பார்த்ததிலேயே, நூலின் விஸ்தீரனத்தை கண்டு வியந்தேன். முதல் பக்கத்திலேயே நூல் ஆசிரியர் சிவன் திரையை விலக்கி என்ற தலைப் பிட்டு எழுதிய முன்னுரை வியக்க வைத்தது.
சினிமாவை கண்டு பிடித்தவர்களைப் பற்றியும், கண்டெடுத்தவர்களைப் பற்றியும், அதன் தற்போதைய வளர்ச்சியை பற்றியும் சிவன் இந்த நூலில் சிறப்பாக விளக்கியுள்ளார். சினிமாவை பற்றி தெரிந்து கொள்ள நினைப் பவர்கள், இந்த நூலை அவசியம் படித்துத் தெரிந்து கொள்ள வேண் டும். சிவன் தனது கருத்தை திணிக்காமல் நூலை எழுதியுள்ளார். பொதுவாக ஒரு நூலைப்படிக்கும் போது, நம்மை அறியாமலேயே அந்த நூல் ஆசிரியர் நம்முடன் நிழல் போல் தொடர்ந்து வருவார்.
ஆனால் அதை தற் போதைய நவீன இலக்கியங்கள் உடைத்தெறிந்துள்ளன. நூல் ஆசிரியரின் ஆளுமை குறையும் போது, நூலின் தன் மையை நம்மால் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. நூல் ஆசிரியர் சிவா 125 நூல்களை மொழி பெயர்த்துள்ளார். நானோ ஒரிரு நூல்களை மட்டுமே எழுதியுள்ளேன். அப்படி இருக்கும் போது, என்னை இந்த நூலை வெளியிடச் செய் தது என்னை பெருமைபடுத்தியுள்ளீர்கள். ஒரு நூலை மொழி பெயர்த்து வெளியிடுவதும் ஒரு வகையில் புதிய படைப்புதான். அதனால் நாங்கள் அதை ஆங்கிலத்தில் ட்ரேன்ஸ்லேஷன் என்று சொல்வதில்லை. ட்ரேன்ஸ்கிரியேஷன் என்றுதான் சொல்லுவோம்" என்றார்.
நிகழ்ச்சியில் லியாகத்அலிகான் பேசும் போது, "இந்த நூலுக்கு பல முக் கிய பிரமுகர்களை கொண்டு ஆசிரியர் முன் னுரை எழுத வைத்துள் ளார். அவர் இரண்டாவது பதிப்பு வெளியிடும் போது முதல்வர் கருணாநிதியிடமும் முன்னுரை வாங்கி நூலை வெளியிட வேண்டும். சினிமாவின் படிப்படியான வளர்ச்சியை இந்த நூல் அழகாக எடுத்துக் காட்டுகிறது. இருபத்து நான்கு பிரேம்களை ஒன்று சேர்த்து அதை எப்படி நடப்பது போல் காட்டுவது என்பதில் துவங்கி இந்த சினிமா வளர்ந்துள்ளது. பயாஸ்கோப், ப்ராகிஸ்னோகோப், கிளாக்கிஸினோகோப், கெனிட்டோஸ்கோப் என படிப்படியாக சினிமா வளர்ந்துள்ளது.
இதற்கு பின்னால், ஏராளமான அறிவியல் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் உள்ளன என்பதையும் அவை எப்படி வளர்ச்சி அடைந்தது என்பதையும், ஆசிரியர் நல்ல முறையில் விளக்கியுள்ளார். நல்ல சினிமா கலைஞனாக மிளிர இந்த நூல் உதவும்"என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment