Pages

Sunday, January 3, 2010

தினம் ஒரு அறிக்கை - என் பணி இதுவே ?

தொந்தரவு தரும் அண்டை நாடுகளுக்கு இடையே இந்தியா உள்ளது. எல்லைக்கு அப்பால் இருந்து உருவாகும் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காப்பாற்றுவது, 2010ம் ஆண்டிலும் மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல்வேறு திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது. இது, சட்ட விரோதமானது. மேலும், பாகிஸ்தானுக்கு ஆயுதங்களையும் சப்ளை செய்கிறது. இருந்தாலும், இந்தியாவுக்கு எதிராக, விரோத மனப்பான்மையுடன் செயல்படுவதாக சீனாவை பார்க்கவில்லை.இந்திய எல்லைப் பகுதியை ஆக்கிரமிப்பது, காஷ்மீரிகளுக்கு தனி விசா வழங்குவது, அருணாச்சல பிரதேசம் மற்றும் தலாய்லாமா விவகாரங்களில் ஏட்டிக்குப் போட்டியாக நடப்பது போன்றவற்றை சீனா செய்வது, நமக்கு கவலை அளிப்பதாக உள்ளது.


இருந்தாலும், இந்த பிரச்னைகள் பற்றி எல்லாம், சீனாவுடன் இந்தியா பேசி வருகிறது. ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம். அங்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள சீனாவுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ உரிமையில்லை. அதனால்தான், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், சீன கம்பெனிகள் செயல்படுவதை சட்ட விரோதம் என்கிறேன்.நடப்பு ஆண்டில், சீனாவுடனான இரு தரப்பு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும் என, நம்புகிறேன். இந்தியாவும் சீனாவும் தங்களுக்கு இடையேயான செயல்திட்ட ரீதியான ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், கருத்து வேறுபாடுகளையும் குறைத்துக் கொண்டிருக்கின்றன.


அண்டை நாடுகள் அனைத்துடனும் நெருங்கிய நட்புறவை கொண்டிருக்க வேண்டும் என்பதே, இந்தியாவின் கொள்கை.இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான், கடும் நடவடிக்கை எடுத்தால், அந்நாட்டுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் துவக்கப்படும். இந்த விஷயத்தில், ஏற்கனவே அளித்த உறுதி மொழிகளை, பாகிஸ்தான் காப்பாற்ற வேண்டும்" இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.

No comments:

Post a Comment