Pages

Sunday, January 24, 2010

நானோ கார், அமெரிக்காவில் மடங்கு விலை இரண்டு





இந்தியாவில் மிக குறைந்த விலையில், ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் டாடா குழுமத்தின் நானோ கார், அமெரிக்காவில், இரண்டு மடங்கு விலையில் விற்கப்படலாம் என, செய்திகள் வெளியாகி உள்ளன.

வடஅமெரிக்காவில் மிக குறைந்த விலையிலான கார்கள், 4.32 லட்சம் ரூபாய் முதல் 4.80 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. எனவே, அதில் பாதி அளவாக, 2.40 லட்சம் ரூபாய் விலையில், அமெரிக்காவில், டாடாவின் நானோ கார் விற்கப்படலாம் என்ற யூகங்கள் நிலவுகின்றன. ஏனென்றால், நானோ காரின் இந்த விலை, பிற குறைந்த விலை கார்களை விடவும் மிகவும் குறைவு.டாடா குழுமத்தின், டாடா தொழில்நுட்ப நிறுவனம், இந்தியாவின் புனே நகரில் இருந்து, அமெரிக்காவின் டெட்ராய்ட் நகருக்கு, "சேம்பய்ன் கோல்டு நானோ எல்.எக்ஸ்.,' மாடல் காரை கொண்டு வந்து பார்வையாளர்கள் பார்ப்பதற்காக வைத்துள்ளது. இதை மீடியாக்கள் மற்றும் ஆட்டோ மொபைல் கம்பெனி அதிகாரிகள் பார்த் துச் சென்றனர். நானோ காரை, அடுத்த மூன்றாண்டுகளில், அமெரிக்காவில் அறிமுகப்படுத்துவது குறித்து, தங்கள் நிறுவனம் பரிசீலித்து வருவதாக, இம்மாத தொடக்கத்தில், டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா, தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment