Pages

Sunday, January 24, 2010

குடியிருக்க வீடு கட்ட பணம் ?


தமிழக அரசு அறிவித்துள்ள, குடிசைகளுக்கு பதிலாக 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தின்படி, பயனாளிகளே வீடுகளை கட்டிக் கொள்ள வேண் டும். ஒவ்வொரு வீட்டுக்கும் 60 ஆயிரம் ரூபாயை அரசு செலவழிக்கும்.




ஒரு குடும்பத்தின் ஏழ்மையை அவர்களது வீடுகளை வைத்தே மதிப்பிட முடியும். இதன் படி மண் குடிசைகளில் வாழும் மக்கள், மிக ஏழ்மையில் உள்ளனர் என்பதை உறுதியாக நம்பலாம். இவர்களது குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதன் மூலம், தீப்பிடிக்கும் ஆபத்து நீங்குகிறது. இயற்கைச்சீற்றங்களின் போது வீடுகள் சேதமடைவதும் அதற்காக அரசு ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ரூபாய் வரை நிவாரண உதவி வழங்குவதும் தடுக்கப்படும். மேலும், சமூக பிரச்னைகள் இதன் மூலம் தீர்வுக்கு வரும். ஆதிதிராவிடர்களுக்கு குடியிருப்பு திட் டங்கள் உள்ளதால், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், குடிசைகளிலேயே வாழும் நிலை உள்ளது. அதுவும், வடமாவட்டங்களில் அதிகளவு குடிசைகள் உள்ளன. ஜாதி ரீதியான மோதல்களுக்கு இந்த வேறுபாடுகளும் காரணமாக உள்ளன. பல நாடுகளில், குடியிருக்க வீடு என்பது அடிப்படை உரிமையாக உள்ளது.




பிரிட்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அரசே அனைவருக்கும் ஒரே மாதிரியான வீடுகளை கட்டித் தருகிறது. மும்பை நகராட்சிக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு ஒன்றில், ஒருவருக்கு குடியிருக்க வீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் படி, அடிப்படை உரிமையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் சராசரியாக 33 சதவீத வீடுகள் குடிசைகளாக உள்ளன. அதாவது, மூன்று வீடுகளில் ஒரு வீடு குடிசை வீடாக உள்ளது. நகர்ப்புறங்களில் 10 வீடுகளுக்கு ஒரு வீடு குடிசையாக உள்ளது. இதில் அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டத்தில் 56.70 சதவீதம் குடிசை வீடுகள் உள்ளன. மிகக் குறைவாக நீலகிரி மாவட்டத்தில் 5.08 சதவீதம் குடிசை வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை மாற்றி, 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும், மெகா திட்டத்தை கவர்னர் உரையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. "கலைஞர் வீட்டு வசதித் திட்டம்' என்ற இந்த மெகா திட்டம், ஏற்கனவே உள்ள இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தை போல வே செயல்படுத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment