
தேர்தல் கமிஷன் உருவாகி 60 ஆண்டுகள் ஆகியுள்ளதால், வைரவிழா கொண்டாட்டத்தின் துவக்கவிழா, டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நாளை நடக்கிறது. இவ்விழாவில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், தேசிய மற்றும் மாநில அளவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 40 முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். விழாவில் புகைப்பட கண்காட்சியும் இடம் பெறுகிறது. சர்வதேச கருத்தரங்கமும் நடக்கவுள்ளது. வைரவிழாவில் பங்கேற்க அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அழைப்பை ஏற்று, இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம், அவர், டில்லிக்கு சென்றார். டில்லியில் உள்ள வசந்த விஹார் இல்லத்தில் ஜெயலலிதா தங்குகிறார். நாளை நடக்கும் வைரவிழாவில் அவர் பங்கேற்று விட்டு, இரவு சென்னைக்கு திரும்புகிறார்.
No comments:
Post a Comment