Pages

Sunday, January 24, 2010

விடுதலைப்புலிகள் இருவருக்கு அமெரிக்காவில் சிறைத் தண்டனை


அமெரிக்காவில் ஆயுதங்கள் வாங்க முயன்றபோது கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. சதஜன் சரசந்திரன் என்பவருக்கு 26 ஆண்டுகளும், நடராசா யோகராசா என்பவருக்கு 14 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து வாஷிங்டன் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரேமண்ட் ஜே. டியரி உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 19, 2006ல் எஃப்.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் தொகைக்கு ஏவுகணைகள் மற்றும் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை புலிகள் இயக்கத்துக்காக வாங்க முயன்றபோது கைது செய்யப்பட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

No comments:

Post a Comment