
டெல்லி மேல்-சபை உறுப்பினர்களாக இருக்கும் 65 எம்.பி.க்களின் பதவி காலம் இந்த ஆண்டுடன் நிறைவு பெறுகிறது. ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, அம்பிகா சோனி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் மோசினா கிட்வாய், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் சதீஷ்சந்திரா மிஸ்ரா, பாரதீய ஜனதா அருண்ஷோரி ஆகியோரின் எம்.பி. பதவி காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.
மத்திய மந்திரிகள் ஆனந்த்சர்மா, எம்.எஸ்.கில், ஜெய்ராம் ரமேஷ், பாரதீய ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹரிபிரசாத், ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோர் பதவியும் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.
சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஜெயாபச்சன் பதவிகாலம் ஜூலை மாதத்துடன் முடி வடைகிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பதவிகாலம் இந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந்தேதி முடிகிறது. அவர் இதற்கு முன் தி.மு.க. கூட்டணியுடன் சேர்ந்து எம்.பி. ஆனார். தற்போது பா.ம.க. எந்த கட்சியுடனும் சேராமல் தனித்து நிற்கிறது.
தொழில் அதிபர் ராகுல் பஜாஜ், சிவசேனாவை சேர்ந்த சஞ்சய்ரவத், தேசிய வாத காங்கிரஸ் தாரிக் அன்வர், பாரதீய ஜனதாவை சேர்ந்த பியாரிமோகன், மொகபத்ரா ஆகியோர் பதவி காலம் முடிவடைகிறது.
ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா, எம்.எஸ்.கில் ஆகியோரது பதவி காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. பஞ்சாபை சேர்ந்த அஸ்வின்குமார், அகாலிதளம் நரேஷ் குஜ்ரால் (முன்னாள் பிரதமர் குஜ்ராலின் மகன்) ஆகியோரது பதவி காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது.
No comments:
Post a Comment