Sunday, January 24, 2010
அரசு ஊழியர்க்கு பளார் ?
அரசு ஊழியர் ஒருவரை கலெக்டர் கன்னத்தில் அறைந்ததால், உத்தரப் பிரேதசத்தில் அரசு ஊழியர் ஸ்டிரைக் தீவிரமடைந்துள்ளது. பல கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப்பிரதேச அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மீது தடியடி நடத்த லக்னோ டி.ஐ.ஜி பிரேம் பிரகாஷ் உத்தரவிட்டார். இதில் பெண்கள் உட்பட ஏராளமான ஊழியர்கள் காயம் அடைந்தனர். இதற்கு அரசு ஊழியர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் லக்னோ கலெக்டர் அமித் குமார் கோஷ், வேளாண்துறை இயக்குனரகத்துக்கு ஆய்வுக்காக சென்றிருந்தார். அங்கும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேறு இடங்களில் பணியாற்றும் ஊழியர்கள், லக்னோ வந்து ஸ்டிரைக்கை தூண்டி விடுவதாக கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. அப்போது எடவா பகுதியில் பணியாற்றும் வேளாண் இயக்குனரக கிளார்க்காக பணிபுரியும் ராம் குமார் என்பவர் வேளாண்துறை இயக்குனரகத்தில் சுற்றிக் கொண்டிருந்தார். அவரிம் கலெக்டர் கோஷ் விசாரித்தார். தாபால்களை கொடுப்பதற்காக லக்னோ வந்ததாக ராம் குமார் கூறினார். தபால்களை காட்டும்படி கலெக்டர் கேட்டார். ஆனால் தபால்களை காட்ட ராம்குமாரால் முடியவில்லை. ஐ.டி கார்டை காட்டும்படி ராம்குமாரிடம் கலெக்டர் கோஷ் கூறினார். பதிலுக்கு உங்கள் ஐ.டி கார்டை காட்டும்படி ராம்குமார் கூறினார். உடனே ஆத்திரம் அடைந்த கலெக்டர் அமித் குமார் கோஷ், ராம்குமார் கன்னதில் ஓங்கி அறைந்தார். இந்த காட்சி டி.வி. செய்தியில் ஒளிபரப்பானது. இதைப் பார்த்த உத்தரப் பிரதேச அரசு ஊழியர்கள் ஆவேசம் அடைந்தனர். இது குறித்து பேட்டியளித்த கலெக்டர் கோஷ், "அரசு ஊழியர் ஸ்டிரைக் சட்டவிரேதமானது என மாநில அரசு கூறியுள்ளது. சாலைகள், அரசு அலுவலகங்களில் சட்டம் ஒழுங்கை காப்பது எனது கடைமை. ஏன் அறைந்தேன் என அந்த நபரை கேளுங்கள். உங்கள் கேள்விக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது. நான் அறிக்கை மட்டும்தான் விடுவேன் " என்றார். அரசு ஊழியர்கள் மீது தடியடி நடத்திய டி.ஐ.ஜி பிரேம் பிரகாஷ், ஊழியரை கன்னத்தில் அறைந்த கலெக்டர் அமீத் குமார் கோஷ் ஆகியோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அரசு ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஊழியரை கலெக்டர் அறைந்த சம்பவம் குறித்து லக்னோ டிவிஷனல் கமிஷனர் விசாரணை நடத்தி 48 மணி நேரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment