
ஹெய்தி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில், இடிந்த ஓட்டலுக்குள் சிக்கி 50 மணி நேரம் போராடிய இந்திய பெண் மீட்கப்பட்டுள்ளார்.
கரீபிய நாடான ஹெய்தியில், கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.தலைநகர் போர்ட் ஆப் பிரின்சில், மோன்டானா என்ற ஓட்டல் உள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசிக்கும் இந்திய பெண் சரளா சந்த்(65) தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, ஹெய்தி சென்றிருந்தார். மோன்டானா ஓட்டலில் சரளா தங்கியிருந்த போது பூகம்பம் தாக்கியது. இந்த இடிபாடுகளில் சரளாவும் சிக்கினார்.இவரது மகன் ஷைராஸ் லால் உட்பட பலரும், சரளாவும் பூகம்பத்தில் இறந்திருப்பார் என, கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அதிருஷ்டவசமாக 50 மணி நேரத்துக்கு பிறகு, வெளிநாட்டு மீட்பு குழுவினர் இவரை இடிபாடுகளிலிருந்து மீட்டனர்.
இது குறித்து சரளா குறிப்பிடுகையில், "இடிபாடுகளில் சிக்கிய நான் ஒவ்வொரு மணி நேரமும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தேன். காலால் தடவியபடி வேறெங்காவது வழி இருக்கிறதா என தேடினேன். என்னுடன் வந்த அதிகாரியும் அங்கே இருந்தார். வலி குறைப்பு மாத்திரைகள் சிலவற்றை கொடுத்தார். வெறும் வயிற்றில் சாப் பிட்டதால் எனக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது. குடிக்க தண்ணீர் இல்லாததால் என்னுடைய சிறுநீரையே குடித்து தாகத்தை தணித்துக் கொண் டேன்' என்றார்.
No comments:
Post a Comment