Pages

Saturday, January 2, 2010

கப்பல் கடத்தல்

இத்தாலியில் இருந்து இந்தியா வந்து கொண்டிருந்த, ரசாயனங்கள் ஏற்றப்பட்ட சரக்குக் கப்பலை, ஏடன் வளைகுடா பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.இதுகுறித்து சிங்கப்பூர் கடற்படை அதிகாரிகள் கூறியதாவது:சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த சரக்குக் கப்பல் "பிடி பரோமணி'. ரசாயனங்கள் ஏற்றப்பட்ட இந்த சரக்குக் கப்பல், இத்தாலியின் ஜெனோவா நகரில் இருந்து, குஜராத் மாநிலம் கண்ட்லா நோக்கி ஏடன் வளைகுடா வழியே வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்தக் கப்பலை சோமாலியா கடற் கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டனர். கப்பலில், இந்தோனேசியாவைச் சேர்ந்த 17 பேர், சீனாவை சேர்ந்த ஐந்து பேர், நைஜீரியா மற்றும் வியட்நாமை சேர்ந்த தலா ஒருவர் என, மொத்தம் 24 பணியாளர்கள் உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment