வேலைக்கு செல்லும் தம்பதியரின் நலன் கருதி இரவு 9 மணிக்கு கூட சிலிண்டர்களை விநியோகம் செய்ய ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் ஏற்பாடு செய்து வருகின்றன.
இதற்கென எண்ணெய் அமைச்சகம் விஷன்&2015 என்ற பெயரில் செயல் திட்டம் வகுத்து பணிகளை ஆற்றி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களின் குறைபாடுகள், புகார்கள் என்ன என்று கண்டறிந்து அவற்றுக்கு தீர்வுகளைக் காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.வேலைக்கு செல்லும் தம்பதியர் பலர் வேலைக்கு கிளம்பும் பொழுது வீடுகளைப் பூட்டிவிட்டுத்தான் செல்கிறார்கள். வீட்டில் வேறு ஆள் இருப்பதில்லை. இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் தீர்ந்துவிட்டால் புதிய சிலிண்டரைப் பெறுவது அவர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. கணவன் மனைவி இருவரில் ஒருவர் அரை நாள் விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் வாங்க அரை நாள் விடுமுறை எடுப்பது அலுவலகத்தில் பிரச்சினைகளை தோற்று விக்கிறது.
அதனால் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க காலையிலும் மாலை, இரவிலும் சிலிண்டர் விநியோகம் செய்ய எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இதன்படி வாடிக்கையாளர் தங்களுக்கு வசதியான நேரத்தை குறிப்பிட்டால், அந்த நேரத்தில் சிலிண்டர்களை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி காலை 7மணிக்கும் இரவு 9மணிக்கும் கூட சிலிண்டர்களை விநியோகம் செய்ய கம்பெனிகள் தயாராகி வருகின்றன. ஆனால் இந்த அகால நேரங்களில் சிலிண்டர்களை விநியோகிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ரூ.25 முதல் 50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம். இந்தத் திட்டம் விரைவில் துவக்கப்படும் என தெரிகிறது. நடப்பு ஜனவரி மாதத்திலேயே சில பகுதிகளில் துவக்கப்படும் எனத் தெரிகிறது. இத்திட்டம் சென்னை, மும்பை, கொல்கத்தா, டில்லி ஆகிய பெரு நகரங்களிலும் பிற முக்கிய நகரங்களிலும் துவக்கப்படும். கேஸ் திருடப்படுவதால் ஒரு சிலிண்டரின் எடை குறைந்துவிடுகிறது. இப்படித் திருடப்படும் கேஸைக் கொண்டே மற்றொரு சிலிண்டர் தயார¢ செய்யப்படுகிறது. அதுவும் எடை குறைவானதாக இருக்கும். இப்படி கேஸ் திருட்டு வாடிக்கையாளரின் பணத்தை கொள்ளையிடுவதாக அமைகிறது.
கேஸ் நிரப்பட்ட சிலிண்டர்களில் இருந்து கேஸ் திருடப்படுவதை தடுக்கும் கருவி ஒன்றை சிலிண்டர்களில் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டமும் அடுத்த சில மாதங்களில் அமலுக்கு வர உள்ளது.
Saturday, January 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment