Saturday, January 2, 2010
பொன்சேகா தமிழர் பகுதியில் ஒட்டு சேகரிப்பு
லங்கையில், வரும் 26ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், தற்போதைய அதிபர் ராஜபக்ஷே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிடுவதால் இருவருக்கிடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.தமிழர்கள் அதிகம் உள்ள யாழ்ப்பாணத்தில், பொன்சேகா நேற்று ஓட்டு சேகரித்தார். அங்குள்ள நல்லூர் கந்தசாமி கோவிலிலும் வழிபாடு நடத்தினார். பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த மதபோதகர் தாமஸ் சவுந்தரநாயகத்தை சந்தித்து பேசினார். பொன்சேகாவுடன், முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்கேவும் சென்றார். யாழ்ப்பாணம் மட்டுமின்றி, தமிழர்கள் அதிகமுள்ள பகுதிகளான அம்பாரா, வவுனியா, மன்னார், திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் பொன்சேகா ஓட்டு சேகரிக்கவுள்ளார். தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் அழைப்பின் பேரிலேயே, தமிழர் வாழும் பகுதிகளுக்கு சரத் பொன்சேகா சென்றதாக, முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் இணைய தளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment