Saturday, January 2, 2010
கார்டூன் வரைந்தவரை கொல்ல முயற்சி
டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர் குர்ட் வெஸ்டர்கார்டு. கார்ட்டூனிஸ்டான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் முஸ்லிம் மக்களை புண்படுத்தும் விதத்தில் கேலிச்சித்திரம் வரைந்ததால், அந்த மத மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிட்டது. இந்நிலையில், கோபன்ஹேகனின் ஆரஸ் பகுதியில் உள்ள தன் வீட்டில் ஐந்து வயது பேத்தியுடன் நேற்று குர்ட் இருந்த போது, கையில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன், அவரது வீட்டுக்குள் மர்மநபர் ஒருவர் நுழைய முயன்றார்.பலத்த போலீஸ் பாதுகாப்பில் இருந்த குர்ட், அபாய ஒலியை எழுப்பி, போலீசாரை உஷார் படுத்தினார். உடன், போலீசார் அந்த மர்மநபரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். விசாரணையில், கொலை செய்ய முயன்ற அந்த நபர், சோமாலியாவைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு அல் - குவைதா பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment