
நக்சலைட்களுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளது என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.நக்சலைட்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. சட்டீஸ்கர் முதல்வர் ராமன்சிங், ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் உள்ளிட்டவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின், அமைச்சர் சிதம்பரம் "நக்சலைட்களுக்கு எதிராக மாநில போலீசாரும், துணை ராணுவத்தினரும் இணைந்து சில மாநிலங்களில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த கூட்டு நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது.இந்த நடவடிக்கை, நக்சலைட்களுக்கெதிராக துப்பாக்கி ஏந்தி சண்டை போடுவதற்கு அல்ல. நக்சலைட்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மீண்டும் சகஜ நிலையை ஏற்படுத்தி, அந்த பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு தான், இந்த கூட்டு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது, வன்முறையோ வேறு எந்தவிதமான சேதமோ ஏற்படாது "இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
No comments:
Post a Comment