Pages

Friday, January 22, 2010

பழநி கோவில் உண்டியல் வசூல் 12 நாட்களில்?


பழநி கோவில் உண்டியல் வசூல் 12 நாட்களில் ரூ. ஒரு கோடியை எட்டியது. தலா ஒரு கிலோ எடையுள்ள நான்கு வெள்ளிக்கட்டிகளை ஒரே பக்தர் காணிக்கையாக செலுத்தியிருந்தார். பழநி கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. உண்டியல் வசூல் வருமாறு: ரொக்கம் ரூ.ஒரு கோடியை எட்டியது. தங்கம் 495 கிராம்.வெள்ளி 7,340 கிராம். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளின் கரன்சிகள் 264. தங்கத்தினால் ஆன வேல், நாணயம், மோதிரம், ஓம், செயின், திருமாங்கல்யம் மற்றும் தலா ஒரு கிலோ எடையுள்ள நான்கு வெள்ளிக்கட்டிகள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. வெள்ளிக்கட்டிகளை ஒரே பக்தர் காணிக்கையாக செலுத்தியிருந்தார். மேற்கண்ட உண்டியல் வசூல் 12 நாட்களில் கிடைத்தது.

No comments:

Post a Comment