Friday, January 1, 2010
'ரஜினியோ ராகவேந்திரர் யோகி. அவருக்கு தொந்தி இருக்காது'
நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் திருமுல்லை வாயல் சரஸ்வதி நகரில் ஸ்ரீராகவேந்திரா கோவில் கட்டியுள்ளார். நேற்று காலை கோவிலை அவர் திறந்து வைத்தார். அப்போது சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமியை வழிபட்டனர். 1/2 கிரவுண்டில் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது.
இது பற்றி லாரன்ஸ் " ராகவேந்திரர் 5 அடி உயர மார்பிள் சிலையால் கட்டப்பட்டுள்ளது. இந்த சிலை ரஜினி யோசனைப்படி தீர்மானிக்கப்பட்டது. எல்லா கோவில்களிலும் ராகவேந்திரருக்கு தொந்தி இருக்கும்.
'ரஜினியோ ராகவேந்திரர் யோகி. அவருக்கு தொந்தி இருக்காது' என்று கூறியதுடன் ஒரு போட்டோவையும் கொடுத்தார். அதன்படியே சிலை தீர்மானிக்கப்பட்டது.
ராகவேந்திரர் சிலையை தொடக்கூடாது என்று சிலகோவில்களில் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் இங்கு சிலையை தொட்டு வணங்கலாம். நாளை முதல் மண்டப பூஜை தொடங்கி 48 நாட்கள் நடைபெறும். அப்போது ரஜினி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பங்கேற்கிறார்கள்"
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment