Pages

Friday, January 1, 2010

ஆண்களும் அதிக அளவில் பியூட்டி பார்லருக்குப் படையெடுக்க

உடலை அழகுபடுத்திக்கொள்வதில், பெண்களுக்கு மட்டும் தான் அக்கறை என்றால் உண்மையில்லை. பெண்களை போல, பியூட்டி பார்லருக்கு சென்று, "பேஷியல், வேக்சிங்' போன்ற நவீன முறைகளில் அழகுபடுத்திக்கொள்வதில் ஆண்கள் தீவிரமாக உள்ளனர்.ஒல்லியாக இருக்க வேண்டும், பார்க்க அழகாக இருக்க வேண்டும், எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்போது டீன்-ஏஜ் இளம் பெண்கள் பியூட்டி பார்லரை நாட ஆரம்பித்துள்ளனர்.
தாங்கள் மேற்கொள்ளும் அழகு சிகிச்சைகளால் அதிகமாகப் பாதிக்கப்படவும் செய்கின்றனர்.அமெரிக்காவில், முன்பெல்லாம் பெண்கள் தங்கள் முகங்களை அழகுபடுத்திக் கொள்வதற்காக பியூட்டி பார்லர் சென்றனர். இப்போது , ஆண்களும் அதிக அளவில் பியூட்டி பார்லருக்குப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.பெய்லர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஜாய் ஜூ, ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறார்.


தன் ஆராய்ச்சியில் இதுவரை தான் அறிந்தவற்றைப் பற்றி அவர் இவ்வாறு கூறியுள்ளார்: அழகு சிகிச்சை என்ற பெயரால், சராசரியாக 14 வயது இளைஞர்கள் ஏமாற்றப் படுகின்றனர். இதனால் அவர்களது உடலில் ஆபத்தான நோய் வரும் என்று தெரிந்தும் கூட பிறரது புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டு இவ்விதம் செய்கின்றனர்.


வெளிறிய தோலை விட கொஞ்சம் பழுப்பு அல்லது மஞ்சள் நிறத் தோலை விரும்பி, தோல் மீது கண்டவற்றைப் பூசுகின்றனர். இதனால் தோல் நிறம் மாறுகிறதோ இல்லையோ, தோல் புற்றுநோய் உருவாகிறது. இப்படி 73.8 சதவீதம் பேர் தோல் சிகிச்சையான "டான்னிங்' என்பதை எடுத்துக் கொள்கின்றனர். 60.5 சதவீதம் பேர் சூரியக் குளியல் போடுகின்றனர். 51.7 சதவீதம் பேர் "வேக்சிங்' என்ற மெழுகு தடவும் சிகிச்சை செய்கின்றனர்;


முக அழகுக்கான "பேஷியல்' முறையையும் பின்பற்றுகின்றனர்.ஒல்லியாக இருந்தால் ஆரோக்கியம் என்றும், குண்டாக இருந்தால் நலக்கேடு என்றும் கருதி, "டயட்' மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். இதுபோக வெந்நீர் ஊற்றுக் குளியல் போடுகின்றனர். இப்படி வெந்நீர் ஊற்றுக் குளியலை வியாபாரமாக்கும் மையங்கள் 1990ல் இருந்ததை விட இப்போது இரண்டு மடங்கு அதிகமாகிவிட்டன.


63.4 சதவீதம் பேர் தலை முடியில் டை அடித்துக் கொள்கின்றனர்.இப்படிப்பட்ட முறைகள் தீங்கு விளைவிப்பவை என்று தெரிந்தும் கூட மேற்கொள்கின்றனர் என்றால், உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய தவறான கருத்துக்கள்தான் காரணம்.இவ்வாறு ஜாய் ஜூ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment