Pages

Friday, January 1, 2010

மாணவர்கள் மிரட்டல் - மந்திரிகள் அலறல் ?

ஆந்திராவில் தனி தெலுங்கானா கேட்டு போராட்டம் நடக்கிறது. தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மந்திரிகளும், எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் நேற்று திடீர் என்று மந்திரிகள் தங்களது ராஜினாமாவை வாபஸ் பெற்றனர். ராஜினாமா வாபஸ் பற்றிய அறிவிப்பை பத்திரிகையாளர்கள் மத்தியில் அறிவித்தனர்.

மந்திரிகள் ராஜினாமா செய்ததற்கு மாணவர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாணவர் அமைப்பு நிர்வாகி கூறியதாவது:-

தெலுங்கானாவுக்கு ஆதரவாக மந்திரிகள் ராஜினாமா செய்தது ஒரு நாடகம் என்பது நிரூபணமாகி விட்டது. இதனால்தான் அவர்கள் ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர். அவர்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம். வெளியில் அவர்களை நடமாட விட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே ராஜினாமா வாபஸ் பெற்ற மந்திரி பொன்னாலா லட்சுமய்யா வீட்டின் மீது கல்வீசப்பட்டது. மந்திரி லட்சுமய்யாவையும் தாக்க முயற்சி நடந்தது. போலீசார் வந்து மீட்டனர்.

இதே போல் நல்கொண்டா, ஹங்கல் போன்ற ஊர்களிலும் மந்திரிகளது வீடுகளை தாக்கும் முயற்சி நடந்தது.

No comments:

Post a Comment