Pages

Friday, January 1, 2010

கதை புதிய படம்

இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக தொடர் வெற்றிகளை பெற்றிருக்கும் சசிக்குமார் இப்போது கதை என்ற பெயரில் உருவாகியிருக்கும் படத்தின் மதுரை ஏரியாவை விலை கொடுத்து வாங்கியிருக்கிறாராம். அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக இருக்கும் ஷான் குமார் என்ற புதுமுகம் நடித்துள்ள படம் கதை. மோகமுள் அபிஷேக் இயக்கியிருக்கிறார். நந்தா, மவுனம் பேசியதே உள்ளிட்ட படங்களை தயாரித்த ராஜன் ராதாகிருஷ்ணன்தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார். புக்கர் பரிசு பெற்ற ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில் நடக்கும் அதிர்ச்சியான சம்பவங்கள்தான் கதை படத்தின் மொத்த கதையும். கடைசி 20 நிமிட க்ளைமாக்ஸை யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு எடுத்திருப்பதாக படக்குழுவினர் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment