"அமெரிக்க விமானத்தை நைஜீரிய நாட்டைச் சேர்ந்த வாலிபன் தகர்க்கப் போவதாக கிடைத்த தகவலை சில உளவு நிறுவனங்கள் மற்ற பாதுகாப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளாதது பொறுத்துக் கொள்ள முடியாது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்கக் கூடாது' என, அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக, அந்த அதிகாரி கூறியதாவது:அமெரிக்க உளவு நிறுவனங்கள் எப்படி செயல்பட வேண்டும் என, நாங்கள் அடிக்கடி கூறி வருகிறோம். இருப்பினும், அமெரிக்க விமானத்தை நைஜீரிய வாலிபன் தகர்க்கப் போவதாக கிடைத்த தகவலை, சில உளவு நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அந்தத் தகவலை எளிதாக எடுத்துக் கொண்டுள்ளன. இது உளவுத் துறையின் தோல்வியே.
இதுபோன்ற செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது.உளவுத் துறையினர் தங்களுக்கு கிடைத்த தகவலை பகிர்ந்து கொள்ளாததால், அபாயகரமான வெடி பொருட்களுடன் விமானத்தில் ஏறி 300 பேரின் உயிரை பறிக்க முற்பட்டுள்ளான் பயங்கரவாதி ஒருவன். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க அனுமதிக்கக் கூடாது.பிரச்னைகளை நாம் விரைவாக ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு உடனடி தீர்வு காண வேண்டும்.
பாதுகாப்பு அமைப்பு முறையில் எந்த விதமான குறைபாடும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதில், சர்வதேச அளவில் ஒரு ஒத்துழைப்பை உருவாக்க வேண்டியதும் அவசியம் என்றார்.
இதற்கிடையில், கடந்த செவ்வாய் கிழமை இந்தப் பிரச்னை தொடர்பாக, அமெரிக்க உளவு நிறுவன உயர் அதிகாரிகளுடன் அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தினார்.அப்போது, விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிப்பது, உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவை பற்றி விவாதித்துள்ளார்.
Friday, January 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment